November 16, 2025
தேசியம்
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்து சதவீதத்தில் வைத்திருக்கிறது கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

தனது வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது தடவையாகவும் நிலையானதாக வைத்திருக்க மத்திய வங்கி புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

பணவீக்கம் நீடிக்கும் நிலையில் இப்போது வட்டி விகிதக் குறைப்புகளை கருத்தில் கொள்ள முடியாது என மத்திய வங்கி தெரிவித்தது

மத்திய வங்கி இந்த வாரம் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளாது என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் பலவீனமான பொருளாதார நிலைமைகள் வரவிருக்கும் மாதங்களில் வட்டி விகிதக் குறைப்புக்கு களம் அமைக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

பொருளாதார வல்லுநர்கள் June மாதத்தில் வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கின்றனர்.

Related posts

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவுக்கான சீன தூதர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடாவுக்குள் வர தடை !

Gaya Raja

Leave a Comment