தேசியம்
செய்திகள்

கனடாவில் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவு!

COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து கனடா ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை கடந்துள்ளது.

குறைந்தது 1 மில்லியன் கனடியர்கள் இப்போது COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். தொற்றின் ஆரம்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு மில்லியன் தொற்றுக்களை சனிக்கிழமை தாண்டியதன் மூலம்; கனடா  ஒரு கடுமையான மைல்கல்லை எட்டியது. உலகளாவிய ரீதியில், உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மில்லியன் தொற்றுக்களை தாண்டிய உலகின் 23வது நாடு கனடா ஆகும்.

சனிக்கிழமை கனடாவில் மொத்தம் 6,937 தொற்றுக்கள் பதிவாகின. வெள்ளிக்கிழமை Easter விடுமுறை காரணமாக அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இதனால் சனிக்கிழமை ஏழாயிரம் தொற்றுக்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகின.

கனடாவின் முதலாவது தொற்று 2020ஆம் ஆண்டு January மாதம் 25ஆம் திகதி Torontoவின்  Sunnybrook சுகாதார அறிவியல் மையத்தில் பதிவானது. இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் (March 11) உலக சுகாதார அமைப்பு  COVID தொற்றை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்தது. அன்றைய தினம் உலகளவில் 126,000 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டது. கனடாவில் அன்று மொத்தம் 108 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.

இப்போது, கனடா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்கின்றது. குறிப்பாக Ontario, Quebec, British Columbia போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் மூன்றாவது அலையின் தாக்கம்  அதிகமாக உள்ளது. சனிக்கிழமை மாத்திரம் Ontarioவில் 3,009, Quebecகில் 1,282, British Columbiaவில் 1,072 என தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. அதிகரித்து வரும் தொற்றுகளுக்கு விடையிறுக்கும் வகையில், இந்த மூன்று மாகாணங்களும் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளை இயற்றியுள்ளன.

March மாதத்தில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணி வரை 2,525 பேர் நாடளாவிய ரீதியில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Health கனடாவின் சமீபத்திய தரவுகளின்படி, வியாழக்கிழமை வரை, மூன்று முக்கிய தொற்றின் புதிய தரவுகளின் 11,652 தொற்றுக்கள் கனடா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இங்கிலாந்தில்  முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றின் புதிய தரவு ஆகும்.
சனிக்கிழமை இரவுடன் கனடாவில் மொத்தம் 1,001,645 தொற்றுக்களும் 23,050 மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் 921,459 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 8 மணியுடன் 5,587,891 கனடியர்கள் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!