தேசியம்
செய்திகள்

Quebecகில் 1,282 புதிய தொற்றுக்கள் பதிவு!

Quebec மாகாணம் சனிக்கிழமை 1,282 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
January மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வெள்ளிக்கிழமை 1,300க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. Quebecகில் மொத்தம் 314,958 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை மேலும் மூன்று மரணங்களும் பதிவாகின. தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை Quebecகில் 10,684 மரணங்கள் பதிவாகியுள்ளன.  

அதேவேளை Quebecகில் தொற்றின் புதிய திரிபின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டியுள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை குறைவடைந்துள்ளது. சனிக்கிழமை காலை வரை Quebec வைத்தியசாலையில் 501 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 124 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 47,194 தடுப்பூசிகளை வழங்கியுள்ளனர். இதன் மூலம் Quebecகில்  வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை 1,488,347 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். இது Quebec மாகாண சனத்தொகையில் 17.5 சதவீதமாகும்.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

Leave a Comment