தேசியம்
செய்திகள்

Ontarioவில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்!

Ontario கடந்த இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. Ontarioவில் இறுதியாக January மாதம் 17ஆம் திகதி 3,422 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 3,089 தொற்றுக்களையும் சனிக்கிழமை 3,009 தொற்றுகளையும் பதிவு செய்தனர். Easter விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை Ontario COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இந்த நிலையில் மாகாணத்துக்கான தொற்றின் ஏழு நாள் சராசரி 2,552 ஆக உள்ளது. இது ஏழு தினங்களுக்கு முன்னர் 1,944 ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தொற்றின் காரணமாக Ontarioவில் மேலும் 39 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் 23 மரணங்கள் வெள்ளிக்கிழமையும் 16 மரணங்கள் சனிக்கிழமையும் பதிவாகியுள்ளன. தொற்றின் காரணமாக Ontarioவில் 7,428 பேர் இறந்துள்ளதாக மாகாண புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை Ontarioவில் அதிகூடிய நிலையை எட்டியுள்ளது. தொடர்ந்தும் 796 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் குறைந்தது 451 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது COVID நோய் தொற்று காலத்தின் அதிகூடிய எண்ணிக்கையாகும். இந்த 451 பேரில் 260 பேர் ventilatorரில் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.

Ontarioவில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை 321,469 பேர் COVID தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Related posts

2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் Toronto, Vancouver நகரங்களில்

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment