தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!

கனடாவில் COVID தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Easter விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் மூலம் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 23,008 என பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மேலதிகமாக 2,686 தொற்றுக்களும் கனடாவில் பதிவாகின. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 990,604 என அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் Easter ஞாயிறு விடுமுறை காரணமாக அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடமாட்டாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

Related posts

கனடா ஒரு ‘போர் வெறியர்’: ரஷ்யா விமர்சனம்

Lankathas Pathmanathan

புதிய குடியேற்றம் மூலம் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் கனடிய அரசின் திட்டம்

Lankathas Pathmanathan

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment