November 13, 2025
தேசியம்
செய்திகள்

Easter வார இறுதியில் கடுமையான கட்டுப்பாடுகளையும் COVID தொற்றுக்களையும் கனடா எதிர்கொள்கிறது!

தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் மூன்று மாகாணங்கள் தொடர்ந்தும் தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது.

Quebec மாகாண தலைநகர் உட்பட மூன்று பிராந்தியங்கள், தற்போது 10 நாள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை Quebec City, Lévis, Gatineau ஆகிய நகரங்கள் எதிர்கொள்கின்றன. வியாழக்கிழமை ஆரம்பமாகி இந்த சிறப்பு கட்டுப்பாட்டுக்கள் 10 தினங்கள் நீடிக்கவுள்ளன. அதேவேளை Quebecகின் நான்கு பிராந்தியங்கள் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் சென்றுள்ளன. Outaouais, Quebec City, Chaudière-Appalaches, Bas-St-Laurent ஆகிய பகுதிகளே வியாழக்கிழமை முதல் தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் சென்றன.

British Columbia கடந்த புதன்கிழமை முதல், மூன்று வார கால கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. Circuit breaker என அழைக்கப்படும் இந்தக் கட்டுப்பாடு தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது.

Ontario சனிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் நான்கு வார கால முழு முடக்கம் ஒன்றுக்குள் சென்றுள்ளது
’Emergency brake’ என அழைக்கப்படும் இந்த முடக்கம் மாகாணத்தில் அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது. மாகாணத்தின் 34 பொது சுகாதார பிராந்தியங்களும் இந்த நான்கு வார கால முடக்கத்தை எதிர்கொள்கின்றன. வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு மாகாணத்தின் அறிவித்தலில் உள்ளாக்கப் படவில்லை. ஆனால் அத்தியாவசிய காரணங்களைத் தவிர மாகாணத்தின் குடியிருப்பாளர்கள் தங்கள் பயணங்களை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Quebec பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை மூடியுள்ளது. ஆனாலும் Ontarioவும் British Columbiaகும் தொடர்ந்தும் பாடசாலைகளை திறந்திருக்க அனுமதித்துள்ளது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment