February 12, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் முதல் BA.2.86 COVID மாறுபாடு பதிவு!

கனடாவில் முதல் BA.2.86  COVID மாறுபாடு உறுதிப்படுத்தப்பட்டது.

British Colombia மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த BA.2.86  தொற்றை உறுதிப்படுத்தினர்.

மாகாண சுகாதார அதிகாரி  Dr. Bonnie Henry, மாகாண சுகாதார அமைச்சர் Adrian Dix செவ்வாய்க்கிழமை (29) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

இந்த COVID மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த COVID மாறுபாடு அண்மையில் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பில் உள்ள மாறுபாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த BA.2.86  COVID மாறுபாடு அண்மையில் கண்டறியப்பட்டது.

கனடாவில் COVID தொற்றின் பாதிப்பில் இந்த மாறுபாடு என்ன விளைவை ஏற்படுத்தும் என கூறுவதற்கு இது உகந்த தருணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள Rainbow பாலம்!

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 11 விபத்தில் ஒருவர் பலி – 11 பேர் காயம்

Lankathas Pathmanathan

James Smith Cree முதல் குடியிருப்புக்கு அமைச்சர் Mendicino விஜயம்

Lankathas Pathmanathan

Leave a Comment