ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
வியாழக்கிழமை காலை வரை குறைந்தது ஒரு dose தடுப்பூசியை பெற்றுள்ள கனடியர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 16 வயதுக்கு மேற்பட்ட 27 மில்லியன் கனேடியர்கள் தடுப்பூசியை பெற வேண்டிய தேவை உள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தவிரவும் 12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு சுமார் 1.4 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போதைய கணிப்புகளின் பிரகாரம் கனடா June மாதம் 30 ஆம் திகதிக்குள் 32 முதல் 36 மில்லியன் Pfizer, Moderna, AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ளது.