தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

அமெரிக்க அதிபர் Joe Biden கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

அவர் கனடிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் ஒன்பதாவது அமெரிக்க அதிபரானார்.

நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், Senatorகள், உயரதிகாரிகள், இராஜதந்திரிகள், உள்நாட்டு தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஆளுநர் நாயகர்கள், வணிக பங்குதாரர்கள் மத்தியில் 40 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் வெள்ளிக்கிழமை (24) மாலை உரையாற்றினார்.

கனடா-அமெரிக்க கூட்டாண்மையின் அவசியத்தை அவரது உரை முன்னிலைப்படுத்தியது.

நட்பு, குடும்பம், வணிகம், கலாச்சாரம் என பல்வேறு வகைகளிலும் பூமியில் எந்த இரண்டு நாடுகளும் இத்தகைய நெருங்கிய உறவுகளால் பிணைக்கப்படவில்லை எனவும் Joe Biden தனது உரையில் தெரிவித்தார்.

எங்கள் விதிகள் பின்னிப்பிணைந்தவை, பிரிக்க முடியாதவை எனவும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் Joe Bidenனின் கனடாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.

27 மணி நேரம் நீடித்த தனது கனடிய பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளி இரவு 9:30 மணியளவில், அமெரிக்க அதிபர் Ottawa விமான நிலையத்திலிருந்து மீண்டும் அமெரிக்கா பயணித்தார்.

Related posts

Ontario COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja

Leave a Comment