February 16, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்கவுடன் நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் கனடாவிடம் அழைப்பு

நெருக்கமான கனடா-அமெரிக்க உறவுகளுக்கு அமெரிக்க அதிபர் Joe Biden அழைப்பு விடுத்தார்.

இப்போது இருப்பது போல், இரு நாட்டு உறவுகள் முன் எப்போதும் வலுவானதாக இருந்ததில்லை என கூறிய அவர், காலத்தின் சவால்களை எதிர்கொள்ள இருநாடுகளும் இன்னும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

Joe Biden கனடாவுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை வியாழக்கிழமை (23) ஆரம்பித்தார்.

வெள்ளிக்கிழமை (24) தலைநகர் Ottawaவில் அவர் பல் சந்திப்புகளில் ஈடுபட்டார்.

வெள்ளியன்று பிரதமர் Justin Trudeauவுடன் சந்திப்பொன்றை அமெரிக்க அதிபர் முன்னெடுத்தார்.

NORADடை மேலும் வலுப்படுத்தும் திட்டங்களை இரு நாட்டின் தலைவர்களும் ஒரு கூட்டு அறிக்கையில் அறிவித்தனர்.

முறையற்ற இடப்பெயர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமற்ற நுழைவுத் கடவைகளுக்கு விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் இணங்கினர்.

இரு நாடுகளின் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் ஒரு ஒருங்கிணைந்த வட அமெரிக்க அணுகுமுறையை நோக்கி இணைந்து செயல்படவும் அவர்கள் இணக்கம் கண்டனர்.

Related posts

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

Lankathas Pathmanathan

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Lankathas Pathmanathan

கனடாவை வந்தடைந்த 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment