தேசியம்
செய்திகள்

B.C. துப்பாக்கிச் சூட்டுடன் இந்திய அரசாங்கம் தொடர்பு?

British Colombia மாகாணத்தின் Surrey நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்து RCMP விசாரணை நடத்துகிறது.

தெற்கு Surrey நகர இல்லத்தில்  நிகழ்ந்த இரவு நேர துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.

இந்த இல்லம் சீக்கிய சமூகத்தின் ஒரு முக்கிய உறுப்பினருக்கு சொந்தமானது என தெரியவருகிறது.

இந்த இல்லம் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் Hardeep Singh Nijjarரின் நண்பருடையது என கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (01) அதிகாலை 1:30 மணி அளவில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வாகனம் பலத்த சேதம் அடைந்தது.

வீட்டின் கதவு பல துப்பாக்கி ஓட்டைகளுடன் இருந்தது.

இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமது விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாக British Colombia Gurdwaras Council செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.

Hardeep Singh Nijjar கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இந்த கொலை இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் நடத்தப்பட்டதாக கனடிய மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியது.

ஆனாலும் இந்திய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment