தேசியம்
செய்திகள்

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் எதிர்வரும் இலையுதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் என Alberta முதல்வர் தெரிவித்தார்.

குழந்தைகள், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு இந்த சட்டத்தை முன்வைப்பதாக Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் Alberta முதல்வர் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த அறிவித்தலை பல மத்திய அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அரசியல் ஆதாயத்திற்காக பாதிக்கப்படக்கூடிய சிறுபான்மையினரை Alberta முதல்வர் குறிவைப்பதாக  அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Alberta முதல்வரின் புதிய கொள்கையானது, பெற்றோர்கள், அவர்களது குழந்தை, அவர்களது மருத்துவருக்கு இடையேயான தனிப்பட்ட முடிவில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறிக்கிறது என Alberta எதிர்க்கட்சித் தலைவர் Rachel Notley கூறினார்.

Related posts

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

Gaya Raja

Leave a Comment