தேசியம்
செய்திகள்

மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் $1 மில்லியன் வெற்றி!

மூன்று தமிழர்கள் உட்பட ஐந்து பணியாளர்கள் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள Maxmillion பரிசை வெற்றி பெற்றனர்.

கடந்த வருடம் October மாதம் 14ஆம் திகதி நடந்த Lotto Max சீட்டிழுப்பில் இவர்கள் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள Maxmillion பரிசை வெற்றி பெற்றனர்.

ஒன்றாக பணிபுரியும் இவர்கள் ஐவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக குழுவாக அதிஸ்ட இலாப சீட்டுகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

வெற்றி பெற்றவர்கள்  Pickering நகரை சேர்ந்த கேதீஸ்வரன் துரைராஜசிங்கம், Scarborough நகரை சேர்ந்த ஞானகலாதேவி அமிர்தலிங்கம், Markham நகரை சேர்ந்த லோகநாதன் சண்முகராஜா, Whitby நகரை சேர்ந்த Mark Brown, Brooklin நகரை சேர்ந்த Raymond Wright ஆகியோர் என தெரியவருகிறது.

இவர்களில் ஒவ்வொருவரும் 200,000 டொலர்களை பெறுகின்றனர்.

Related posts

பொது சுகாதார நிறுவன தலைமையில் மாற்றம்!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

Gaya Raja

Leave a Comment