தேசியம்
செய்திகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள்

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இதுவரை இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆண்கள் என  பொது சுகாதார அதிகாரிகள்  வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர்.

Quebecகில் 98, Ontarioவில் ஒன்பது, Albertaவில் நான்கு,  British Columbiaவில் ஒன்று என தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

தவிரவும் சந்தேகத்திற்குரிய ஏனைய தொற்றுக்கள் விசாரிக்கப்படுகின்றன என கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.

நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொற்றுக்கள் உள்ள மாகாணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த தொற்றின் பரவல் காரணமாக அதிக ஆபத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி போட வேண்டும் என நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது.

ஆனாலும் இந்த தொற்றுக்கு எதிரான பொது  தடுப்பூசி நடவடிக்கை தற்போது தேவையில்லை என Dr. Tam கூறினார்.

Related posts

வியாழனன்று நாடளாவிய ரீதியில் 4,500க்கும் அதிகமான தொற்றுகள்!

Gaya Raja

பதவி விலக்கப்படுவாரா பசுமைக் கட்சியின் தலைவி?

Gaya Raja

Torontoவில் கனமழைக்கான எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment