தேசியம்
செய்திகள்

Ontarioவில் மாகாண ரீதியான வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை அறிவிக்க வேண்டும்;வைத்தியர்கள் கோரிக்கை

Ontarioவில் மாகாண ரீதியில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவொன்றை அறிவிக்குமாறு Toronto, Peel, Ottawa ஆகிய இடங்களின் தலைமை வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

COVID தொற்றின் புதிய திரிபை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு வைத்தியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை Ontario’வின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு இவர்கள் அனுப்பியுள்ளனர்.  April மாதம் 4ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. நான்கு வார கால முழு முடக்கம் ஒன்று Ontarioவில் அறிவிக்கப்பட்டாலும் தொற்றின் பரவலை தடுக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என மருத்துவர்கள் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Ontarioவில் தற்போது  நான்கு வார கால முழு முடக்கம் அமுலில் உள்ளது. April மாதம் 3ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த முடக்கம் அமுலுக்கு வந்தது. Emergency brake’ என அழைக்கப்படும் இந்த முடக்கம்   மாகாணத்தில் அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது.

Related posts

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Leave a Comment