தேசியம்
செய்திகள்

கனடா இந்த வாரம் 2.2 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளது!

கனடாவுக்கு இந்த வாரம் 2.2 மில்லியன் வரை COVID தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதில் COVAX  திட்டத்தின் மூலம் கனடாவை வந்தடையவுள்ள 316,800 Oxford-AstraZeneca தடுப்பூசிகளும் அடங்குகின்றது. இந்த தடுப்பூசிகள் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு முயற்சியில் இருந்து கனடாவுக்கு  அனுப்பப்படவுள்ளன.

தவிரவும் 1,019,070 Pfizer தடுப்பூசிகளையும், 855,600 Moderna தடுப்பூசிகளையும் இந்த வாரம் கனடா பெறவுள்ளது. கடந்த வாரம் கனடா 3 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் காலாண்டின் முடிவில், கனடா மொத்தம் 9.5 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றது. இந்த எண்ணிக்கை 6 மில்லியனாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. இரண்டாவது காலாண்டில், கனடா May மாத இறுதி வரை ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு மில்லியன் Pfizer தடுப்பூசியைப் பெற உள்ளது. இது June மாதத்தில் வாரத்திற்கு இரண்டு மில்லியன் வரை அதிகரிக்கும்.

இதன் மூலம் கனடா தினத்திற்கு முன்னர் (July 1) கனடா Pfizer, Moderna, AstraZeneca ஆகிய நிறுவனங்களில் இருந்து மொத்தம் 44 மில்லியன் தடுப்பூசிகளை பெறும் என அரசாங்கம் கூறியுள்ளது. COVID தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை பெற விரும்பும் ஒவ்வொரு கனேடியருக்கும் September மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

Related posts

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Lankathas Pathmanathan

ஹைட்டியை விட்டு வெளியேற கனடிய அரசின் மேலதிக விமான சேவைகள்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அர்ஜுன் பாலசிங்கம்

Gaya Raja

Leave a Comment