தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

Ontario கல்வி ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடிய நிலை தோன்றியுள்ளது.

55 ஆயிரம் Ontario கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஐந்து நாள் அறிவிப்பை புதன்கிழமை (16) தாக்கல் செய்துள்ளது.

இதன் காரணமாக திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் மூடப்பட கூடிய நிலை தோன்றியுள்ளது.

மாகாண அரசாங்கத்துடனான பேச்சுக்கள் மீண்டும் முடங்கி விட்டன என கனடிய பொது ஊழியர் சங்கம் கூறியது.

சுதந்திரமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததாக CUPE தெரிவித்தது.

இந்த நிலையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்துடன் முன்வருமாறு Doug Ford அரசாங்கத்தை Ontario பாடசாலை வாரிய தலைவர் Laura Walton வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் வேலை நிறுத்தம் செய்வதற்கான தேவையற்ற முடிவால் அரசாங்கம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது என கல்வி அமைச்சர் Stephen Lecce கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததில் இருந்து, மாகாணம் பல சலுகைகள் உள்ளடக்கிய ஒப்பந்தங்களை முன்வைத்துள்ளது என கூறிய அமைச்சர், CUPE இதுவரை அவற்றை நிராகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

CUPE உறுப்பினர்கள் வெளிநடப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கும் Bill 28 மசோதா நேற்று முன்தினம் மாகாணசபையில் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja

Sturgeon நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment