தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இன்று (புதன்) கனடிய பிரதமர் Justin Trudeauவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபசியில் உரையாடினார்கள். இன்றைய உரையாடலில்  இரு நாடுகளின் தடுப்பூசி வழங்கள் குறித்தும் தடுப்பூசியின் சர்வதேச விநியோக ஒருங்கிணைப்பு தேவையின் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் உரையாடினர். இந்தியாவில் தயாரிக்கப்படும் COVID தடுப்பூசிகளை கனடா பெறும் வாய்ப்புகள் குறித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய உரையாடல் இடம்பெற்றது

Health கனடாவினால் மதிப்பாய்வின் இறுதி கட்டங்களில் உள்ள Astra Zeneca தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியாவின் Serum நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில்  AstraZenecaவின் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 25 நாடுகளில் கனடா இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

கனேடிய இசைக் கலைஞர் Gordon Lightfoot மரணம்

சீக்கியப் பேரணியில் கனடாவின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment