November 10, 2024
தேசியம்
செய்திகள்

Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா

Astra Zeneca COVID தடுப்பூசிக்கான  மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளதாக Health கனடா கூறியுள்ளது.

Health கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma இந்தத் தகவலை வெளியிட்டார். ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மதிப்பாய்வை இறுதி செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படலாம் எனவும் அவர் கூறினார்

October மாதம் 1ஆம் திகதி முதல் சமர்ப்பிக்கப்பட்ட AstraZeneca தடுப்பூசியின் மறுபரிசீலனை செய்து வருவதாக Health கனடா January மாத இறுதியில் தெரிவித்திருந்தது. December மாதம் 9ஆம் திகதி Health கனடா Pfizer-BioNTech தடுப்பூசியை அங்கீகரித்தது. தொடர்ந்து December மாதம் 23ஆம் திகதி Moderna தயாரித்த COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

Lankathas Pathmanathan

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

Gaya Raja

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment