தேசியம்
செய்திகள்

சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

இஸ்ரேலிய தாக்குதலில் சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் சேதமடைந்துள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடிய தூதரகமும் சேதமடைந்துள்ளது.

ஆனாலும் கனடிய தூதரகத்தின் முழுமையான சேத நிலை குறித்து கனடிய அதிகாரிகள் வெளிப்படையாக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

சிரிய உள்நாட்டுப் போர் மோசமடைந்ததால் 2012 இல் கனடிய தூதரகம் செயல்பாடுகளை நிறுத்தியது.

கனடாவின் தூதரக கட்டிடம் April 1 நடைபெற்ற வான் தாக்குதலில் சேதம் அடைந்தது என கனடிய வெளிவிவகார அமைச்சின் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது.

ஆனாலும் கட்டிடத்தின் கட்டமைப்பு சேதம் குறித்து அதிகாரிகள் இதுவரை மதிப்பீடு செய்யவில்லை.

இந்த வான் தாக்குதல் குறித்து கனடா முன்கூட்டியே எச்சரிக்கப்பட வில்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை கூறினார்.

தூதரகம் மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அமைச்சர் தூதரகம் சேதமடைந்ததையும் ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என அவர் கூறினார்

இந்த தூதரக கட்டிடம் கனடா அரசாங்கத்தின் சொத்தாகவே உள்ளது என கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

கனடிய இராஜதந்திரிகள், RCMP அதிகாரிகள் உட்பட பிற பணியாளர்கள் தூதரகம் மூடப்பட்டதிலிருந்து பல சந்தர்ப்பங்களில் சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் தூதரகத்தை செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

கனேடிய மத்திய அரசின் புதிய வரவு செலவு திட்டம்: குறையும் பற்றாக்குறை!

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment