தேசியம்
செய்திகள்

2020 முதல் மோசடி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு: RCMP

2020 முதல் கனடாவில் மோசடி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அவதானிப்பதாக RCMP தெரிவிக்கின்றது

இதில் பெரும்பாலானவை கடந்த ஆண்டில் இணையம் மூலம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோசடி செய்பவர்களின் தந்திரோபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கனேடியர்களுக்கு RCMP அறிவுறுத்துகிறது.

இந்த ஆண்டு August இறுதிவரை 332.7 மில்லியன் டொலர்கள் மோசடியில் இழக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 61 ஆயிரத்து 305 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக கனேடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் அறிக்கை கூறுகிறது.

இதில் 38 ஆயிரத்து 812 பேர் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டை விட 130 சதவீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Torontoவின் COVID அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம்: பிரதமர்

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

Lankathas Pathmanathan

Leave a Comment