தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தின் புதிய முதல்வர் தெரிவு

Quebec மாகாணத்தின் புதிய முதல்வராக Christine Fréchette தெரிவாகியுள்ளார்.

முதல்வர் பதவிக்கான போட்டியில் அவர் சக போட்டியாளர் முன்னாள் கல்விம் சுற்றுச்சூழல் அமைச்சர் Bernard Drainville-வை வெற்றி கொண்டார்.

முதல்வர் François Legault-க்கு பதிலாக புதிய தலைமைப் பதவிக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை (12) முடிவுக்கு வந்தது.

October 5-ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடுத்த தேர்தல் வரை, Coalition Avenir Québec (CAQ) தலைமை பதவியை Christine Fréchette பொறுப்பை ஏற்கிறார்.

இந்தத் தேர்தலில் Christine Fréchette 57.9 சதவீதமான வாக்குகளை பெற்றார்.

இதன் மூலம் அவர் Quebec மாகாணத்தின் புதிய முதல்வராகவும் தெரிவாகியுள்ளார்.

அவர் மாகாணத்தில் 33-வது முதல்வராகவும், அந்த பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்களாகவும், CAQ கட்சியின் இரண்டாவது தலைவராகவும் அமைகிறார்.

56 வயதான Christine Fréchette, 2022-ல் Coalition Avenir Québec கட்சி சார்பில் முதன்முதலில் மாகாணசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2024-ல் பொருளாதாரம், புத்தாக்கம், எரிசக்தி அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அவர் குடிவரவு அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ரஷ்ய நிறுவனங்கள் கனடாவில் தடை!

Lankathas Pathmanathan

Doug Ford பொருளாதாரச் செயல்பாடுகளை விமர்சித்த Liberal கட்சித் தலைமை போட்டியாளர்கள்?

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment