தேசியம்
செய்திகள்

பின்லாந்து ஜனாதிபதியை சந்திக்கும் Mark Carney

கனடிய பிரதமர், பின்லாந்து ஜனாதிபதியை இந்த வாரம் சந்திக்கின்றார்.

கனடிய பிரதமர் Mark Carney, இந்த வாரம் Ottawa-வில் பின்லாந்து ஜனாதிபதி Alexander Stubb – வை சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ இருதரப்பு சந்திப்பாக இது அமைகிறது.

வர்த்தகம், பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்காக Alexander Stubb செவ்வாய் (14), புதன்கிழமைகளில் (15) கனடாவில் தங்கி இருப்பார் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான “மிகவும் வலுவான, வளர்ந்து வரும் உறவு” குறித்து குறிப்பிட்ட Mark Carney, பின்லாந்து ஜனாதிபதியை வரவேற்பதை ஆவலுடன் எதிர் நோக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Ontario Liberal தலைவர் தோல்வி!

Lankathas Pathmanathan

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment