தேசியம்
செய்திகள்

கட்சி எதிர்காலத்தைப் பாதுகாக்க பதவியில் இருந்து விலகினேன்: François Legault

Coalition Avenir Québec (CAQ) கட்சியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாக Quebec முதல்வர் François Legault கூறினார்.

Quebec முதல்வர் பதவியில் இருந்து விலகும் François Legault உணர்ச்சிப்பூர்வமான தனது இறுதி  உரையை ஞாயிற்றுக்கிழமை (12) ஆற்றினார்.

புதிய தலைவரை CAQ கட்சி தேர்ந்தெடுத்த நிலையில், கட்சி உறுப்பினர்களிடம், பதவி விலகும் முதல்வர் Francois Legault உரையாற்றி விடைபெற்றார்.

CAQ கட்சியை 2011- இல் உருவாக்கிய Francois Legault, இரண்டு முறை பெரும்பான்மை அரசாங்கங்களை அமைக்க கட்சியை வழிநடத்தினார்.

Quebec மாகாணத்தின் புதிய முதல்வராகவும், CAQ கட்சியின் தலைவராகவும் Christine Fréchette ஞாயிறன்று தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை – கனடிய தமிழர் பேரவை கவலை

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் முதல் petrol விலை குறைகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment