தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான சீன தூதர் பதவி விலகல்

கனடாவுக்கான சீன தூதர் Cong Peiwu பதவி விலகியுள்ளார்.

கனடாவுக்கான சீன தூதராக 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், தனது பதவியை விட்டு விலகி சீனா திரும்பியுள்ளார்.

அவர் ஏன் தனது பதவியை விட்டு விலகினார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த பதவி விலகலை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது

அவரது பதவிக் காலத்தில், சீனாவுடனான கனடாவின் உறவு, தொடர்ச்சியான பதட்டத்தின் மத்தியில் சிதைந்துள்ளது.

இதில் கனடியர்கள் Michael Spavor, Michael Kovrig ஆகியோரை 2018 இன் பிற்பகுதியிலிருந்து 2021 இலையுதிர் காலம் வரை சீனா தடுத்து வைத்தது பிரதானமாகும்.

இந்த பதவி விலகலுக்கான காரணம் குறித்த கேள்விக்கு Ottawaவில் உள்ள சீன தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த கனடிய அரசாங்கம் ஒரு பிரதிநிதியை சீனா அனுப்பியுள்ளது.

வெளியுறவு அமைச்சின் துணை அமைச்சர் David Morrison இப்போது சீனாவில் இருப்பதை வெளிவிவகார அமைச்சு  உறுதிப்படுத்தியுள்ளது.

David Morrison உடன் சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் Ma Zhaoxu பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Related posts

81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கும் Manitoba

Lankathas Pathmanathan

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

Leave a Comment