தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் ஆறு தமிழர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.

Progressive Conservative கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், Markham – Thornhill தொகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் இருவரும் இரண்டாவது தடவையாக மாகாண சபை உறுப்பினர் ஆகின்றனர்.

NDP கட்சியின் சார்பில் Scarborough Centre தொகுதியில் போட்டியிட்ட நீதன் சான், Markham – Unionville தொகுதியில் போட்டியிட்ட செந்தில் மகாலிங்கம் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெறத் தவறினர்.

Liberal கட்சியின் சார்பில் Scarborough North தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்தராஜன், பசுமை கட்சியின் சார்பில் Markham-Unionville தொகுதியில் போட்டியிட்ட சாந்தா சுந்தரேசன் ஆகியோரும் வெற்றி பெறவில்லை.

Related posts

சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்

Gaya Raja

Nova Scotiaவில் கடுமையான எல்லை கட்டுப்பாடுகள்!

Gaya Raja

அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்ட முன்னாள் Toronto நகர முதல்வரின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Leave a Comment