September 30, 2026
தேசியம்
செய்திகள்

மின்சார வாகனங்களை உருவாக்க கனடிய வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம்?

Ontarioவில் மின்சார வாகனங்களை உருவாக்க பல பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை Honda நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கனடிய வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம் என முதல்வர் Doug Ford கூறினார்.

Ontarioவில் மின்சார வாகனங்கள், அவற்றின் பாகங்களை உருவாக்க Honda பல பில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை இந்த வார இறுதியில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மின்கலங்களை உருவாக்குவதற்கு புதிய தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு வியாழக்கிழமை (25) Alliston நகரில் உள்ள Honda தொழில்சாலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான அரசு மானியங்கள் குறித்த விவரங்கள் அன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனேடிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்க ஏற்பாடு!

Gaya Raja

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment