தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

கனடிய அரசாங்கம் COVID தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளுக்கு மாகாணங்களே பொறுப்பு எனவும் அமைச்சர் கூறினார். சுமார் 8 இலட்சம் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் சேமிப்பில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தவுடன் மாகாணங்களுக்கும்  பிரதேசங்களுக்கும்  வழங்கப்படுவதாகவும்  அமைச்சர்  ஆனந்த் கூறினார்.

இதுவரை கனடா 4.7 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாக கூறிய அமைச்சர், அவற்றில் 73 சதவீதமானவை கனடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

பிரதமருடன் அவசர சந்திப்புக்கு மாகாண, பிராந்திய முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

Lankathas Pathmanathan

Justin Trudeau, பாப்பரசர் Francis சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment