September 13, 2024
தேசியம்
செய்திகள்

தமிழ் நடை பயணக் குழுவினரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ள Ontario முதல்வர்

Barrie நகரில் இருந்து Toronto வரை நெடு நடை பயணம் மேற்கொண்டவர்கள் வியாழக்கிழமை  தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை சபர்ப்பித்தனர். புதன்கிழமை இந்த நடைபயணம்  Torontoவின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தின் முன்னால் முடிவடைந்தது.

வியாழன் அங்கிருந்து இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் தூதரகங்களில் மகஜர்களை சமர்ப்பித்த நடை பயணக் குழுவினர் பின்னர் Ontario மாகாண சபை நோக்கி பயணித்தனர். அங்கு இவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை Markham Thornhill தொகுதியின் தமிழ் மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி பெற்றுக் கொண்டார் .

இதேவேளை இந்த நடை பயணத்தை  மேற்கொண்டவர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை Ontario மாகாண முதல்வர் Doug Ford சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது

Related posts

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

முழுமையான கட்டுப்பாட்டுக்குள் Ontario!

Lankathas Pathmanathan

உலக பொருளாதாரத்திற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்: துணை பிரதமர் Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment