தேசியம்
செய்திகள்

Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும்: Mark Carney, Doug Ford நம்பிக்கை!

World Series தொடரின் முதலாவது ஆட்டத்திற்கு முன்னதாக பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (23) Toronto Blue Jays அணியை சந்தித்தார்.

Rogers மைதானத்திற்கான தனது விஜயத்தின் போது Blue Jays தலைவர் Mark Shapiro, பொது மேலாளர் Ross Atkins, அணியின் மேலாளர் John Schneider ஆகியோருடன் Mark Carney உரையாடினார்.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடருக்கு முன்னேறியுள்ள நிலையில் பிரதமரின் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

Blue Jays அணி, Los Angeles Dodgers அணியை World Series தொடரில் எதிர்கொள்ள உள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இந்தத் தொடருக்காக கனடா ஆர்வமாக உள்ளது என தெரிவித்தார்

Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும் எனவும் Mark Carney நம்பிக்கை தெரிவித்தார்.

தானும் Ontario முதல்வரும் எத்தனை ஆட்டங்களில் Blue Jays அணி Dodgers அணியை தோற்கடிக்கும் என்பதில் ஒரே கருத்தில் உள்ளதாவும் Mark Carney  கூறினார்.

முன்னதாக,  Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும் என வியாழன் காலை Pickering நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Doug Ford கூறியிருந்தார்.

இந்தத் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தன்னுடன் பந்தயம் கட்ட தயாராகவில்லை எனவும் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டு உச்சி மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்வதால் இந்தத் தொடரின் போது தான் கனடாவில் இருக்கப் போவதில்லை என Mark Carney கவலை தெரிவித்தார்.

October 24 முதல் November 1-ஆம் திகதி வரை பிரதமர் ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தத் தொடரின் ஏழு ஆட்டங்களும் இந்த நாட்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும்.

World Series தொடரின் முதலாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (24) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

Toronto-வில் நடைபெறவுள்ள நான்கு World Series ஆட்டங்களுக்கான நுழைவு சீட்டுகள் செவ்வாய்க்கிழமை (21) காலை விற்பனைக்கு விடப்பட்ட 30 நிமிடங்களுக்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

1993-ஆம் ஆண்டு Blue Jays இறுதியாக World Series தொடரில் பங்கேற்றது.

அந்த ஆண்டு Blue Jays அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக World Series தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan

புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அமெரிக்க மதுபான தடை விலகாது: Doug Ford

Lankathas Pathmanathan

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Leave a Comment