September 10, 2026
தேசியம்
செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் மரபை எதிர்கொள்கிறோம்: கறுப்பு July நினைவு குறித்து Pierre Poilievre

தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் கொடூரமான மரபை நாம் மீண்டும் ஒருமுறை எதிர்கொள்கிறோம் என Conservative தலைவர் தெரிவித்தார்.

கறுப்பு July நினைவு நிறைவையொட்டி Conservative தலைவர் Pierre Poilievre அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி குறித்து இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு – கொலை செய்யப்பட்டு – இரரகசியமாக புதைக்கப்பட்டனர் என Pierre Poilievre அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்

எங்கெல்லாம் பெருமளவிலான அட்டூழியங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கனடாவுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

முன்னர் உறுதியளித்தது போல, எதிர்கால Conservative அரசாங்கம் உண்மையான, உறுதியான நடவடிக்கையை எடுக்கும் என Pierre Poilievre கூறினார்.

Conservative தலைவரின் முழுமையான அறிக்கை
Conservative தலைவரின் முழுமையான அறிக்கை

Related posts

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment