September 28, 2026
தேசியம்
செய்திகள்

ஒன்பது வயது கனடிய சிறுமியின் மரணத்தில் தந்தை கைது

Montreal-லைச் சேர்ந்த ஒன்பது வயது கனடிய சிறுமி அமெரிக்காவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

ஒன்பது வயதான தனது மகள் Melina Frattolin காணாமல் போனதாக 45 வயதான Luciano Frattolin சனிக்கிழமை (19) காவல்துறையில் புகார் அளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (20) அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார் என New York மாநில காவல்துறை (NYSP) திங்கட்கிழமை (21) உறுதிப்படுத்தியது.

Vermont எல்லைக்கு அருகிலுள்ள ஒரு குளத்தின் ஆழமற்ற பகுதியில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தந்தையும் மகளும் விடுமுறைக்காக அமெரிக்காவிற்குள் July 11 -ஆம் திகதி சட்டப்பூர்வமாக நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
July 20-ஆம் திகதி அவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment