தேசியம்
செய்திகள்

இல்லங்களில் அத்துமீறி நுழைந்ததாக தமிழரான சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

Markham நகரில் இல்லங்களில் நுழைந்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

York பிராந்திய காவல்துறையின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் புலனாய்வாளர்கள் தமிழரான ஒரு சந்தேக நபர் மீது இதில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

கைதானவர் Markham நகரை சேர்ந்த 36 வயதான நிஷாந்த் செல்வரட்னம் என தெரிவிக்கப்படுகிறது.

November 18 காலை Old Kennedy Road and Steeles Avenue East பகுதியில் இல்லத்திற்குள் ஒருவர் நுழைந்ததாக கிடைத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பூட்டப்படாத கதவு வழியாக சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்தார் எனவும் வீட்டு உரிமையாளரை எதிர்கொண்டபோது அவர் பயந்து ஓடிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள குறைந்தது மேலும் இரண்டு வீடுகளுக்குள் நுழைய முயன்று தோல்வியடைந்ததை காவல்துறையினர் அறிந்தனர்.

பின்னர் சந்தேக நபர் November 26, 2025 அன்று கைது செய்யப்பட்டு இதுவரை நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில், நிஷாந்த் செல்வரட்னம் வேறு குற்றங்களுக்காக நன்னடத்தை பிணையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புவதால், York பிராந்திய காவல்துறை சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இவரால் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் குற்றச்சாட்டுகளை சுமத்த புலனாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவைர நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

நிறைவுக்கு வந்தது திருத்தந்தையின் கனடிய பயணம்

Lankathas Pathmanathan

Ontario அரசின் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வெளியானது!

Gaya Raja

கனடிய குத்துச்சண்டை வீரர் George Chuvalo மறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment