Liberal கட்சியின் சார்பில் மூவரும், Conservative கட்சியின் சார்பில் இருவரும், Bloc Quebecois, NDP சார்பில் தலா ஒருவரும் என தமிழ் வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஐவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
Liberal கட்சியின் சார்பில் அனிதா ஆனந்த் மீண்டும் Oakville தொகுதியிலும், ஹரி அனந்தசங்கரி மீண்டும் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட, முதல் தடவையாக வைத்தியர் அல்போன்ஸ் ராஜகுமார் Saskatoon West தொகுதியில் போட்டியிடுகிறார்.
Conservative கட்சியின் சார்பில் சஜந்த் மோகனகாந்தன் York South – Weston தொகுதியிலும், மல்கம் பொன்னையன் Scarborough மத்திய தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.
Quebec மாகாணத்தில் மாத்திரம் வேட்பாளர்களை களம் இறக்கும் Bloc Quebecois கட்சி சார்பில் ஷோபிகா வைத்தியநாதசர்மா Rosemont – LA Petite – Patrie தொகுதியில் இம்முறை போட்டியிடுகின்றார். ஒரு தமிழ் வேட்பாளர், Bloc Quebecois சார்பில் போட்டியிடுவதும், Quebec மாகாணத்தில் போட்டியிடுவதும் இதுவே முதல் தடவையாகும்.