தேசியம்
செய்திகள்

Chrystia Freeland தேர்தல் சட்டத்தை மீறினார்?

2024 Toronto இடைத் தேர்தலின் போது முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Chrystia Freeland சட்டத்தை மீறினார் என கனடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Chrystia Freeland தற்செயலாக தேர்தல் சட்டத்தை மீறியதாக கனடிய தேர்தல் திணைக்கள ஆணையர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளில், 2024 Toronto இடைத் தேர்தல் குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்ததன் மூலம் Chrystia Freeland தேர்தல் சட்டத்தை மீறியதாக தேர்தல் திணைக்கள ஆணையர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (13) வெளியிடப்பட்ட இந்த சம்பவங்கள் குறித்த அறிக்கை, ஒரு வேட்பாளருக்கு யார் பங்களிப்பு செய்யலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளை மேற்கோளிட்டுள்ளது.

June 23,24 2024 திகதிகளில் நடைபெற்ற இரண்டு அரசாங்க வரவு செலவுத் திட்ட அறிவிப்புகளின் போது Chrystia Freeland துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்தார்.

இந்த அறிவிப்புகளின் போது அவரிடம் Toronto-St. Paul’s Liberal வேட்பாளர் Leslie Church குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, Leslie Church-க்கு தனது ஆதரவை Chrystia Freeland வெளிப்படுத்தினார்.

அரசாங்க பிரதிநிதியாக அரசாங்க நிகழ்வுகளில்  Chrystia Freeland  இந்தக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால், அவரது கருத்துக்கள் கனடா அரசாங்கத்தின் பிரச்சார பங்களிப்பாக அமைந்ததாக அறிக்கை கூறிகிறது.

தனது கருத்துக்கள் தேர்தல் சட்டத்தை மீறி இருக்கும் என்பதை Chrystia Freeland அறிந்திருக்கவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

தனிப்பட்ட நிதி அபராதம் எதையும் எதிர்கொள்ளாத Chrystia Freeland, மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என கனடிய தேர்தல் திணைக்களத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதற்காக அவரது முன்னாள் தொகுதி January மாதத்தில் தேர்தல் திணைக்கழகத்திக்கு $910.58 அபராதம் செலுத்தியது.

அந்த இடைத் தேர்தலில் Conservative கட்சி வேட்பாளர் Don Stewart-சிடம் தோல்வியடைந்த Leslie Church கடந்த வசந்த கால பொதுத் தேர்தலில் அந்த இடத்தை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – விஜய் தணிகாசலம் 

Lankathas Pathmanathan

விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான  பருவகால ஊழியர்களை பணியமர்த்தும் கனடா Post – Purolator !

Gaya Raja

Ontarioவில் செவ்வாய்க்கிழமை 3,453 தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment