September 9, 2026
தேசியம்
செய்திகள்

September மாத பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

September மாதத்தில் பணவீக்கம் 2.4 சதவீதமாக அதிகரித்தது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  செவ்வாய்க்கிழமை  (21) இந்த அதிகரிப்பை அறிவித்தது.

இது August மாதத்தில் இருந்த 1.9 சதவீதத்தை விட, அரை சதவீதம் அதிகரிப்பாகும்.

இது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளை விட ஒரு படி அதிகமாகும்.

எரிபொருள், மளிகைப் பொருட்களின்  விலை அதிகரிப்பு காரணமாக இந்தப் பணவீக்க அதிகரிப்பு பதிவானது.

இந்த பணவீக்க அறிக்கை, October 29-ஆம் திகதி வெளியாகவுள்ள கனடிய மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித முடிவில் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனடாவில் 42 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Gaya Raja

Fairview வணிக வளாக பாதுகாப்பு ஊழியர் மீது துப்பாக்கி சூடு

Lankathas Pathmanathan

Leave a Comment