தேசியம்
செய்திகள்

உலக Junior Hockey Champion: ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி மறுப்பு – பிரதமர் Mark Carney அதிரடி அறிவிப்பு!

Alberta மாகாணத்தில் இந்த ஆண்டு December மாதம் நடைபெற உள்ள உலக World Junior Championships போட்டிகளில் ரஷ்ய Ice Hockey வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் உலகின் முன்னணி இளைஞர் Hockey அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், ரஷ்ய அணிக்கு போட்டிக்கான அனுமதி மறுக்கப்படும் என்பதைப் பிரதமரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் ஆக்கிரமிப்பு, சர்வதேச அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு கனடிய அரசாங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

விளையாட்டுத் துறையில் ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச தடைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என இரண்டு கனடிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான சட்டவிரோத போர் நீடிக்கும் வரை, ரஷ்யா எந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படக் கூடாது என கனடாவின் விளையாட்டு துறை அமைச்சர் Adam van Koeverden,  வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவுகள் Ontarioவில் இரட்டிப்பாகியுள்ளன!

Gaya Raja

கனடா-New Hampshire எல்லைக் கடவையில் துப்பாக்கிச் சூடு?

Lankathas Pathmanathan

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan

Leave a Comment