தேசியம்
செய்திகள்

Tumbler Ridge அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சித் தலைவர்கள்!

British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மத்திய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து கலந்து கொண்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (10) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக Tumbler Ridge நகர மண்டபத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை (13) மாலை கூடிய ஏராளமான மக்களுடன் மத்திய, மாகாண அரசியல் தலைவர்களும் இணைந்தனர்.

பிரதமர் Mark Carney, Conservative தலைவர் Pierre Poilievre, Bloc Québécois தலைவர் Yves-François Blanchet, NDP இடைக்காலத் தலைவர் Don Davies, பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் அனைத்து கட்சி தலைவர்களையும் ஒரே விமானத்தில் Tumbler Ridge-க்கு பயணிக்க அழைத்திருந்தார் என்பதை Elizabeth May உறுதிப்படுத்தினார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான எட்டுப் பேரையும் தனது உரையில் நினைவு கூர்ந்த Mark Carney, காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இது அரசியலுக்கான நேரம் அல்ல என்பதை தெளிவுபடுத்திய Pierre Poilievre, இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அனைவரின் நினைவுகள் மூலம் வாழ்வார்கள் என கூறினார்.

Yves-François Blanchet, Don Davies, Elizabeth May, ஆளுநர் நாயகம் Mary Simon, B.C.முதல்வர் David Eby, முதற் குடிகளின் தலைவர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

“இங்கு, துக்கத்தில் ஒரு சமூகமாக நாங்கள் ஒன்று கூடுகிறோம்,” என Tumbler Ridge நகர முதல்வர் Darryl Krakowka நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தின் போது, அங்கு கலந்து கொண்டிருந்தவர்கள் இறந்தவர்களின் படங்களையும் விளக்குகளையும் ஏந்தியபடி கனடிய தேசிய கீதத்தை பாடினர்.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவு கூடும் இடத்தில் கட்சித் தலைவர்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கனடிய வரலாற்றில் மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான இந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் – மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

Related posts

ரஷ்யா மீது கனடா புதிய தடைகள்!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment