தேசியம்
செய்திகள்

Terrebonne தேர்தல் முடிவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Liberal நாடாளுமன்ற உறுப்பினரின் தேர்தல் வெற்றியை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது.

Terrebonne மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

கடந்த இலைதுளிர் காலத்தில் நடந்த மத்திய தேர்தலில் Quebec மாகாணத்தில் அமைந்துள்ள Terrebonne தொகுயை Bloc Québécois வேட்பாளர் Nathalie Sinclair-Desgagné-வை விட ஒரு அதிக வாக்கு பெற்று Liberal கட்சியைச் சேர்ந்த Tatiana Auguste வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியை ஆரம்பத்தில் Bloc Québécois கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற நீதித்துறை மறு எண்ணிக்கையின் பின்னர் Liberal வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தொகுதியை வென்றதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த தேர்தல் முடிவுகளை கனடிய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (13) இரத்து செய்தது.

இந்த தேர்தல் முடிவு குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் நீதிபதிகள் தங்கள் முடிவை அறிவித்தனர்.

Terrebonne தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண், Bloc Québécois வேட்பாளருக்கு தனது வாக்கை அஞ்சல் செய்ததாகவும், ஆனால் அஞ்சல் உறையின் முகவரியில் ஒரு பிழை காரணமாக அவரது சிறப்பு வாக்கு கடிதம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அது ஒருபோதும் எண்ணப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.

சரியான நபர் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை Nathalie Sinclair-Desgagné-வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் Julius Grey, ஒன்பது நீதிபதிகளிடமும் வலியுறுத்தினார்.

கடந்த October மாதம், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி Nathalie Sinclair-Desgagné-வின் புதிய தேர்தலுக்கான கோரிக்கையை நிராகரித்தார்.

ஒரு மனித தவறினால் கனடிய தேர்தல் முறையின் நேர்மை பாதிக்கப்படவில்லை என அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

153 million அடையாள அட்டைகள் திருட்டு: அமெரிக்க FBI விசாரணையை தீவிரமாக கண்காணிக்கும் RCMP!

Lankathas Pathmanathan

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மனு!

Lankathas Pathmanathan

பொது சுகாதார சேவைகளை தனியாருக்கு விரிவு படுத்தும் Ontario திட்டம் குறித்து கேள்வி

Lankathas Pathmanathan

Leave a Comment