தேசியம்
செய்திகள்

B.C. பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு வெள்ளிக்கிழமை (13) நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரதமர் Mark Carney கலந்து கொள்கிறார்.

கனடிய வரலாற்றில் மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர் – மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை (10) நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவு கூறும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் British Colombia பயணிக்கிறார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமரை Tumbler Ridge நகர முதல்வர் Darryl Krakowka அழைத்ததாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.

Conservative தலைவர் Pierre Poilievre, Bloc Québécois தலைவர் Yves-François Blanchet ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

NDP இடைக்காலத் தலைவர்Don Davies, பசுமைக் கட்சித் தலைவர் Elizabeth May ஆகியோரும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடசாலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் எதிரொலியாக வழக்கமான நாடாளுமன்ற சபை அமர்வுகள் புதன்கிழமை (11) இடைநிறுத்தப்பட்டது.

ஒரு நிமிட மௌன அஞ்சலியின் பின்னர், பொதுவாக கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கட்சித் தலைவர்கள் சபையில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் உரைக்குப் பின்னர், சபை அமர்வுகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

வியாழக்கிழமை (12) வழக்கமான சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தாலும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் எதிரொலி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகளிலும் ஒலித்தது.

Bumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏழு நாட்களுக்கு மத்திய அரசின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Tumbler Ridge சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் அனைத்து வகையிலும் உதவ தயார்: ஹரி ஆனந்தசங்கரி – தேசியம்

B.C. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்! – தேசியம்

B.C. மாகாண பாடசாலை துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: RCMP – தேசியம்

Related posts

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja

இந்த மாத இறுதியில் Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment