தேசியம்
செய்திகள்

FIFA தொடரில் கனடாவின் முதலாவது வெற்றி

FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா வெற்றி பெற்றது.

கனடிய உதைபந்தாட்ட வரலாற்றில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இது நோக்கப்படுகிறது.

இது FIFA தொடரில் கனடாவின் முதலாவது வெற்றியாகும்.

கனடா இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, தனது முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்தது.

வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் Qatar அணியை 6-0 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது.

இதன் மூலம் ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, Switzerland அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக, goal வித்தியாசத்தின் அடிப்படையில் கனடாவை ‘B’ பிரிவில் முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளது.

FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரில் கனடாவின் இரண்டாவது போட்டியானது, Vancouver நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டி ஆகும்.

வியாழன் நடைபெற்ற இந்தப்  போட்டிக்காக, BC Place மைதானத்தில் 52,497 பேர் திரண்டனர்.

இவர்களில் கனடிய பிரதமர் Mark Carney, அவரது மனைவி ஆகியோர் அடங்குகின்றனர்.

அவர்களுடன் FIFA தலைவர் Gianni Infantino அமர்ந்திருந்தார்.

G7 உச்சி மாநாடு காரணமாக, கடந்த வாரம் Toronto-வில் நடந்த கனடாவின் முதலாவது ஆட்டத்தைத் பிரதமர் தவறவிட்டிருந்தார்.

ஆட்டத்தின் பாதி நேரத்தின் போது 3-0 என்ற goal கணக்கில் முன்னிலை பெற்ற கனடா, முழு ஆதிக்கத்தையும் தன்வசம் கொண்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் முதலாவது பாதியில் மூன்று இரண்டாம் பாதியில் மூன்று என கனடா goal பெற்றது.

Jonathan David மூன்று, Cyle Larin, Nathan Saliba ஆகியோர் தலா ஒன்று என கனடாவுக்கு goal பெற்றனர். Jacob Shaffelburg அடித்த பந்து, Qatar அணியின் Mohamed Al Mannai மீது பட்டுத் தெறித்து, அவர்களின் வலைக்குள் வீழ்ந்தது.

1966-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தின் பின்னர் போட்டியை நடத்தும் நாட்டிலிருந்து ஒரு வீரர் மூன்று goal பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம், கனடா  இறுதிக் குழுநிலை போட்டியில் தனது குழுவை வெல்வதற்கு ஒரு சமன் மட்டுமே தேவைப்படும் நிலையில் களமிறங்குகிறது.

முன்னதாக Bosnia and Herzegovina அணியை 4-1 என்ற goal கணக்கில் வீழ்த்தியதன் மூலம், Switzerland அணி ‘B’ பிரிவில் முதலிடத்தை பிடித்தது.

ஆனால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட goals வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், goal வித்தியாசத்தில் கனடா Switzerland அணியை விட முன்னிலை பெறுகிறது.

கனடாவின் அடுத்த ஆட்டம் Switzerland அணிக்கு எதிராக அடுத்த வாரம் (June 24) நடைபெறுகிறது.

Related posts

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

Gaya Raja

Leave a Comment