தேசியம்
செய்திகள்

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

Conservative கட்சியின் தலைவரும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியின் தலைவருமான Erin O’Toole தனது நிழல் அமைச்சரவையை அறிவித்தார்.

இதில் நீண்ட கால அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் Pierre Poilievre, கட்சியின் நிதி விமர்சகராக அறிவிக்கப்பட்டார்

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை, அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் விமர்சகர்களாக செயல்படும்.

தனது நிழல் அமைச்சரவை கனடாவின் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாக்கும் என O’Toole தெரிவித்தார்

அதேவேளை இந்த நிழல் அமைச்சரவையில் முன்னாள் கட்சி தலைமை போட்டியாளரான Leslyn Lewis,  Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu ஆகியோர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment