தேசியம்
செய்திகள்

CTVக்கு எதிராக வழக்கில் தீர்வை எட்டிய Patrick Brown

Ontarioவின் முன்னாள் Progressive Conservative கட்சித் தலைவரும், Brampton நகரின் தற்போதைய முதல்வருமான Patrick Brown, CTVக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஒரு தீர்வை எட்டியுள்ளார்.

Brownனுடன் ஒரு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக புதன்கிழமை (09) CTV ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

இந்த உடன்பாடு காரணமாக பணம் எதுவும் கைமாறவில்லை என CTV தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
2018 January மாதம் இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக CTV  செய்தி வெளியிட்டது.

இதன் பின்னர் Ontario மாகாண Progressive Conservative தலைவர் பதவியில் இருந்து Brown விலகினார்.

நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத இந்த குற்றச்சாட்டுகளை Brown தொடர்ந்தும் மறுத்து வந்தார்.

தமது செய்தி ஒளிபரப்பில்  வெளியிட்ட விவரங்களில் தவறுகள் இருந்ததை CTV இன்றைய தனது அறிக்கையில் ஏற்றுக் கொண்டது.

இதன் காரணமாக Brownக்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால் அதற்கு வருந்துவதாகவும் CTV கூறியது.

கனடாவின் Conservative கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில்  Brown நுழைவார் என்று பலர் எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Related posts

இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி

Lankathas Pathmanathan

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!