தேசியம்
செய்திகள்

Quebecகில் தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சீராக இருக்கும்

அடுத்த 2 வாரங்களில் Quebec மருத்துவமனையில் COVID தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சீராக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது

Quebec மாகாண அரசாங்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்ட புதிய கணிப்புகளில் இந்த விபரம் வெளியானது

கடந்த இரண்டு வாரங்களாக மாகாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில்  நிலையான சரிவு எதிர் கொள்ளப்பட்டது.

இது தொடர்ந்து வரும் வாரங்களில் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

புதிதாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் தினசரி சுமார் 68 என்ற எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் சீராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (09) நிலையில் 1,222 பேர் மருத்துவமனையில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

Related posts

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan

2026 முதல் மின்சார வாகன விற்பனையை கட்டாயமாக்கும் கனடா

Lankathas Pathmanathan

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

Gaya Raja

Leave a Comment