தேசியம்
செய்திகள்

B.C. மாகாண பாடசாலை துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி: RCMP

British Colombia மாகாண Tumbler Ridge பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக RCMP தெரிவித்தது.

மதியம் 1:20 மணி அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக RCMP கூறுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போது, அதிகாரிகள் காயமடைந்த பலரை கண்டுபிடித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கருதப்படும் ஒரு நபரும், தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்துடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பாடசாலைக்குள் மேலும் ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது இறந்தார்.

பலத்த காயங்களுடன் இரண்டு பேர் பாடசாலையில் இருந்து விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

மீதமிருந்த அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக காவல்துறைனர் நம்பும் ஒரு வீட்டிற்குள் மேலும் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை மாலை 6 மணியளவில் மீளப்பெறப்பட்டது.

இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவோ அல்லது மேலும் வேறு எந்த சந்தேக நபர்களும் இருப்பதாகவோ தெரியல்லை எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது.

Related posts

சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை இரத்து செய்யுமா கனடிய அரசு?

Lankathas Pathmanathan

Filipino வீதி திருவிழாவில் வாகனத்தால் மோதப்பட்டு ஒன்பது பேர் பலி!

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாள் இடைநிறுத்தம்!

Lankathas Pathmanathan

Leave a Comment