September 24, 2026
தேசியம்
செய்திகள்

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney

ஜெர்மனிக்கான தனது இந்த வாரப் பயணத்தின் போது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் Mark Carney திட்டமிட்டுள்ளார்.

இந்த வாரம் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், புதிய வணிக முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Mark Carney புதன்கிழமை (11) பயணிக்கிறார்.

2020-ஆம் ஆண்டில் Justin Trudeau-வுக்கு பின்னர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் கனடிய பிரதமர் இவராவார்.

60-க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்களும் அரசுத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், செயற்கை நுண்ணறிவு, Digital உருமாற்ற அமைச்சர் Evan Solomon, பாதுகாப்பு கொள்முதல் துறை செயலாளர் Stephen Fuhr ஆகியோர் பிரதமருடன் இந்தப் பயணத்தில் இணைவார்கள்.

சனிக்கிழமை (14) Mark Carney ஐரோப்பிய ஒன்றிய (EU) ஆணையத் தலைவர் Ursula von der Leyen-னைச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!

Lankathas Pathmanathan

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

சபை அமர்வுகளின் நடைமுறை குறித்து சபாநாயகரின் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment