September 28, 2026
தேசியம்
செய்திகள்

சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை இரத்து செய்யுமா கனடிய அரசு?

சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை இரத்து செய்வது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த வரிகளை இரத்து செய்வது அல்லது எளிதாக்குவது குறித்த முடிவு மதிப்பாய்வில் உள்ளதாக விவசாய அமைச்சர் Heath MacDonald தெரிவித்தார்.
ஆனால் ஏனைய துறைகளில் இது ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கனடிய அரசாங்கம்  2024-ஆம் ஆண்டின் October மாதத்தில் இந்த வரிகளை விதித்தது.
சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதாக இந்த நகர்வு  குறித்து கனடிய அரசாங்கம் தெரிவித்தது.
முழு மின்சார வாகனங்களின் விற்பனை 39.2 சதவீதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் திங்கட்கிழமை வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவித்தன.

Related posts

2075-ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை 57 மில்லியனைத் தாண்டும்?

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

கனடாவுக்காக போராடுவோம்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment