தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Pierre Poilievre: இரண்டாவது சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு?

அரசியலில், இரண்டாவது சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முதல் கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre வரை இது பொருந்தும். Doug Ford, John Tory, Olivia Chow என இதற்கு உள்ளூர் உதாரணங்கள் பல. அரசியல் என்பது இரண்டாம் சந்தர்ப்பத்திற்கான ஒரு தளமாகும்.

Doug Ford, 2014 Toronto நகர முதல்வர் பதவி போட்டியில் John Tory-யிடம் தோற்றார். இப்போது அவர் Ontario-வில் மூன்றாவது முறையாக முதல்வராக உள்ளார். ஒரு காலத்தில் Progressive Conservative தலைவராக இருந்த John Tory, அடுத்த ஆண்டு மீண்டும் Toronto நகர முதல்வராகலாம். 2014 Toronto நகர முதல்வர் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த Olivia Chow-வை அவர் வெற்றி பெற வேண்டும். 2023-இல் John Tory பதவி விலகும் வரை Olivia Chow-வின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் அரசியலில் இல்லாத நிலையில், அந்த ஆண்டு நடந்த நகர முதல்வர் இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

Pierre Poilievre இரண்டாவது வாய்ப்பு என்னும் வகையில் நல்ல நிலையில் உள்ளார் என்பதை இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

தேசியம் August 2025 சஞ்சிகையில் வெளியான முழுமையான கட்டுரை ……….

 

Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot இடைத் தேர்தலில் Conservative தலைவர் 80.4 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். இந்தத் தொகுதி நாட்டின் பாதுகாப்பான Conservative கோட்டைகளில் ஒன்றாகும். Pierre Poilievre-ருக்காக தனது ஆசனத்தை விட்டுக் கொடுத்த Damien Kurek, கடந்த வசந்த காலத் தேர்ததில் இந்தத் தொகுதியில் 82 சதவீத வாக்குகளைப் பெற்றார். மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட Alberta இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்  இலையுதிர் காலத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தில் ஆசனத்தை அவர் உறுதிப்படுத்தினார். April 28 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியால், Alberta-வில் இடைத் தேர்தலில் மீண்டும் களமிறங்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. தனது 25-ஆவது வயது முதல் பிரதிநிதித்துவப்படுத்திய Kanata-Carleton தொகுதியை Pierre Poilievre பொதுத் தேர்தலில் Liberal கட்சி வேட்பாளர் Bruce Fanjoy-யிடம் தோற்றார். 2004-ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் Pierre Poilievre தோல்வியடையக்கூடிய சாத்தியக்கூறு குறித்து தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரே எதிர்வு கூறல்கள் இருந்தன.

Pierre Poilievre-ரின் இடைத் தேர்தல் வெற்றியை தாண்டி, January மாதம் Calgary நகரில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில் அவரது அடுத்த போராட்டமான தலைமைத்துவ மறு ஆய்வு வாக்கெடுப்புக்கு களம் அமைக்கிறது. கட்சிக்குள் எவரும் அவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஆனாலும் கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் இருந்த Pierre Poilievre, பிரதமர் Mark Carney-யிடம் தேர்தலில் தோல்வி அடைந்ததை கண்டு பல Conservative ஆதரவாளர்கள் பதறிப் போயுள்ளனர் என்பது தான் உண்மை.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Conservative கட்சி 46.9, NDP கட்சி 18.7, Liberal கட்சி 18.6, Bloc Québécois கட்சி 9.7, பசுமை கட்சி 2.7 என மக்கள் ஆதரவை பெற்றிருந்தன. இது இரண்டாவது கட்சியை விட 28.3 சதவீதம் அதிகரித்த ஆதரவு நிலையாகும். அதை இழந்தது Conservative கட்சியினருக்கு பெரும் பின்னடைவாகும். இந்தத் தேர்தல், குறிப்பாக சொந்தத் தொகுதியில் தோல்வி என்பது Pierre Poilievre-ரின் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1988-ஆம் ஆண்டு Brian Mulroney-க்குப் பின்னர் Conservative கட்சி அதிக மக்கள் வாக்குகளைப் பெறுவதற்கு Pierre Poilievre தான் வழிவகுத்தார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, Mark Carney-யின் Liberal கட்சி 43.7 சதவீத வாக்குகளை இம்முறை பெற்றது. இது 1980-ஆம் ஆண்டு Pierre Trudeau-வுக்கு பின்னர் கட்சி பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாகும்.

வெற்றி உறுதி என்ற தேர்தெடுக்கப்பட்ட தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையவேண்டிய நிலை Conservative தலைவருக்கு. Pierre Poilievre-ருக்கு இந்த Alberta இடைத்தேர்தல் இரண்டாவது சந்தர்ப்பத்திற்கான வாய்ப்பாக அமையுமா?

ராகவி புவிதாஸ்

தேசியம் August 2025 சஞ்சிகையில் வெளியான முழுமையான கட்டுரை ……….

Related posts

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

Gaya Raja

அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைக்கும் வரவு செலவுத் திட்டம்!

Gaya Raja

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment