September 8, 2026
தேசியம்
செய்திகள்

பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதே சீனாவின் நிலையான கொள்கை: கனடாவுக்கான சீனத் தூதர்

கிரீன்லாந்தை ஆதரிப்பது குறித்து சீனா கனடாவுடன் ஒத்த கருத்தை கொண்டுள்ளது என் கனடாவுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை கனடாவுக்கான சீனத் தூதர் Wang Di வலியுறுத்தினார்.

சீன இதில் ஒரு பிரதான பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதே சீனாவின் நிலையான கொள்கையாகும் எனவும் அவர் கூறினார்.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அண்மைய காலமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் அதிகரித்த பதற்றத்தை தோற்றுவிக்கும் நேரத்தில் சீனத் தூதரின் இந்தக் கருத்து வெளியானது.

“சர்வதேச சட்டம், ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள், கொள்கைகளின் சில பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் Wang Di கூறினார்.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து குறித்து சீனாவின் எதிர்ப்பையும் அவர் பதிவிட்டார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

அடுத்த கல்வியாண்டு திட்டங்களை அறிவித்த Ontario மாகாண அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment