தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Conservative கட்சியின் Nova Scotia மாகாண வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

Dartmouth-Cole Harbour தொகுதியின் வேட்பாளர் Troy Myers தேர்தலில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இவருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டை Conservative கட்சி தீவிரமாக கையாள்வதாக கட்சியின் தேசிய பிரச்சார தலைமையகத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கை குறிப்பிடுகின்றது.

Conservative கட்சி அவரது வேட்பு மனுவை திரும்பப் பெற Myersசை அறிவுறுத்தியதாகவும் அவர் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Nova Scotia மாகாணத்தில் NDP கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட Lauren Skabar என்பவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

Leave a Comment